• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மருதமலை கோவிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்..,

BySeenu

Jun 30, 2025

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடத்த சிலதினங்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்துசுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று தனது மனைவியை பார்ப்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்தார்.

கோவை வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துக் விட்டு மாலை 6:15 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார். பின்னர் அங்கு இருந்து 6.45 மணி அளவில் கிளம்பினார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.