சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களும் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர். போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தங்கமணி மாணவர்களிடம் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி சேதுபதி பள்ளியில் இருந்து தொடங்கி மதுரை ரயில் சந்திப்பு வரை சென்று பின்னர் பள்ளியில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் அழகர், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தங்கமணி, உதவி ஆய்வாளர்கள் பரமேஸ்வரி, பாண்டியராஜன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.