பழனி அடுத்த பி.ஆர்.ஜி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் நகுலன். கடந்த சில மாதங்களாக யோகாசனம் பயிற்சி எடுத்து வந்துள்ளான். தலைகீழாக காலை மடித்து நிற்கக்கூடிய பத்ம சிரசாசனம் என்கின்ற ஆசனத்தை சிறுவன் தொடர்ச்சியாக முயற்சி செய்து கற்றுக் கொண்டுள்ளான்.

பத்ம சிரசாசனம் செய்தபடி 15 நிமிடம் சிறுவன் நகுலன் நின்றது உலக சாதனையாக குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும் சிறுவனின் சாதனையை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. யோகாசனத்தில் சற்று கடினமான ஆசனங்களில் ஒன்றான பத்ம சிரசாசனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவனை பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினர். தொடர்ந்து யோகாசனம் கற்று பல்வேறு சாதனைகளை படைக்க முயற்சி செய்வேன் என நகுலன் தெரிவித்துள்ளார்.








