• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரூ. 21.11 கோடிக்கு ஏலம் போன மாவீரர் நெப்போலியனின் போர் வாள்

Byகாயத்ரி

Dec 8, 2021

மாவீரர் நெப்போலியன் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர அடுத்தடுத்து போர்களை தொடுத்தார்.

எனினும் அவரது கனவு கடைசி வரை நினைவாக வில்லை. போர்களத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு அது உதாரணமாக அமைந்தது. இந்த நிலையில், 1799ஆம் ஆண்டு நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் போர்வாள் இந்திய மதிப்பில் ரூ. 21.11 கோடிக்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது.

மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார் என்றார்.