தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வார்டு எண் 23 திருவள்ளூர் காலனி பகுதி இளைஞர்கள் மற்றும் மோஹித் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்படுகிறது.

கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி ரூபாய் 30,000 நன்கொடை வழங்கினார்.
நன்கொடை வழங்கியதற்கு கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.