மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய தாழ்தள பேருந்து மூலக்கரை அருகே வரும் பொழுது பேருந்தின் பின்புறம் பலமாக சத்தம் வந்துள்ளது.

இதனை கவனித்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி பார்த்த பொழுது சாலையில் பின்புறம் ஏதோ உரசி கொண்டே இருப்பதை கவனித்துள்ளார் உடனடியாக பயணிகள் அனைவரையும் மூலக்கரை பேருந்து நிலையத்திலேயே இறக்கச் சொல்லி புதூர் டிப்போ மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். நீங்கள் அதை அப்படியே கப்பலூர் வரை கம்பெனிக்கு எடுத்து சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பேருந்தை கப்பலூரை நோக்கி எடுத்துக்கொண்டு வரும்பொழுது தனமணி மஹால் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை வரை அருகே சாலையை தரதரவென கிழித்துக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை பேருந்து சென்றது.
ஆபத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி இருபுறமும் கல்களை அடைகட்டி நிப்பாட்டி வைத்துள்ளார். சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சாலையை கிழித்துக்கொண்டு வாகனம் சென்றது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தாள்தன பேருந்து அடிக்கடி பழுதாக பயணிக்கும் பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எந்த நேரம் என்ன நடக்குமோ என அச்சத்தினுடைய தாழ் தர பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் இதை உடனடியாக சீர் செய்து பயணிகளின் நலன் காக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமா? போக்குவரத்து கழக நிர்வாகம்.