தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 5 1 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு சிசிடிவி கேமரா குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பெட்ஷீட் நோட்டு புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கி கொண்டாடினர்.

இது குறித்து செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளர் சரத்குமார் பேசும் பொழுது இதன் அருகில் உள்ள பள்ளியில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்றது.
அதற்கு அந்த பள்ளியின் காவலாளியை கைது செய்யப்பட்டார் சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுபோன்று மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு சிசிடிவி கேமராக்களை வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.