இராஜபாளையத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் விக்ரந்த், விருதுநகர் தென்மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.