விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு எடை போடும் இயந்திரம் மற்றும் இனிப்புகள் வழங்கினர் .

இதை அடுத்து இராஜபாளையம் அய்னார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அந்த மக்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொட்டினர். மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவையான பாத்திரங்கள் அரிசி படிக்கும் குழந்தைகளுக்கு நோட்புக் பேனா போன்றவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட துணை தலைவர் டாக்டர் யமுனா தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் சமீர் கழக நிர்வாகி சிவக்குமார் முன்னிலையில் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் ஏ. ஆர். ரவி பாலாஜி .. தீவான். சரவணன் மற்றும் பாலாஜி ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு காந்த சிலை ரவுன்டானவில் இனிப்புகளும் வழங்கி விஜய் பிறந்தநாளை கொண்டாடினர்.