சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் 102து பிறந்த நாளை முன்னிட்டு பிரமாண்டமான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய பகுதி செயலாளருமான ச. அரவிந்த்ரமேஷ் தலைமையிலும், 14 வது மண்டல் குழுத் தலைவரும் மேற்கு பகுதி செயலாளருமான எஸ்.வி. ரவிச்சந்திரன்,15 வது மண்டல குழுத் தலைவரும் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளருன வி.இ.மதியழகன் மற்றும் புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் சென்னை சோழிங்கநல்லூர் கைலாஷ் கார்டனில் மாலை 5.மணியளவில் தொடங்கபட்டு எழுச்சி உடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் நிகழ்த்த. நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன்,நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும் தி.மு.க முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சருமான பி.மூர்த்தி ஆகியோர் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கலைஞர் செய்த சாதனைகளையும் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த மற்றும் செய்துக் கொண்டிருக்கிற சாதனைகளையும் பட்டியலிட்டு திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.













; ?>)
; ?>)
; ?>)