வைகைச் செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகை செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.
இந்தியா மதசார்பற்ற நாடு மதம் வேறு அரசியல் வேறு என்று பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். மதத்தையும் வழிபாட்டையும் கருவியாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று…..
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தந்தை மகனுக்குமான பிரச்சனை மிகவும் வருத்தத்துக்குரியது இருவரும் ஒன்றிணைைய வேண்டும்
ஒன்றிணைந்தால் தான் வன்னியர் சமுதாய மக்களுக்கு நல்லது
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் பேட்டி

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.
திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பார்வையற்றோர் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினார் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார் திருமாவளவன் நான் நன்கு அறிந்தவன்.
தலைவர்களுக்குள் ஆயிரம் சந்திப்புகள் சாதாரணமாக நடக்கும் அதை வைத்து கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூறி விட முடியாது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார் அது அவரது விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பாகும்.
சில கருத்து வேறுபாடுகள் திமுக கூட்டணிக்குள் உள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்கின்றனர் திருமாவளவன் கேட்கின்றார் மேலும் சில கட்சிகள் ஆட்சியில் பங்கு அதிகாரிகள் பங்கு என்று கூறுகின்றனர். அந்தக் கட்சிகள் எதிர்பார்ப்பது ஒன்று தவறு கிடையாது.
ஆனால் இது நடந்தால் தான் கூட்டணியில் இருப்போம் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
இந்துத்துவாவை அடிப்படையாக வைத்து நடத்தக்கூடிய கட்சி தான் பாஜக அதனால் தேர்தல் நேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காக முருகன் மாநாட்டை நடத்துகின்றனர் இதை வாக்குக்காக ஒரு கருவியாக நடத்துகின்றனர்.
முருகனை வழிபடுபவர்கள் பாஜகவில் மட்டுமில்லை திமுகவில் உள்ளனர் காங்கிரசில் உள்ளனர் அனைத்து கட்சியிலும் உள்ளனர்.
முருகன் மாநாடு நடத்தினால் இந்துக்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க போவது கிடையாது ஓட்டு வங்கியாக மாறும் சூழ்நிலை கிடையாது.
முருகன் மாநாட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வரும் என்று நினைப்பது மூடநம்பிக்கை. இந்தியா மதசார்பற்ற நாடு மதம் வேறு அரசியல் வேறு என்பதை மக்களுக்கு புரிந்து கொண்டுள்ளனர் மதத்தை வைத்து வழிபாட்டை கருவியாக பயன்படுத்தி தமிழ்நாட்டை ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று.
ராம ஜென்ம பூமியை கையில் எடுத்ததாலேயே பாஜக ஆட்சிக்கு வந்துவிடவில்லை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று தான் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றனர்.
அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவைகளை வைத்து தான் ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியும். முருகன் மாநாடு நடத்துவது என்பது அவருடைய உரிமை
அதிமுக பாஜக கூட்டணிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது இரண்டு கூட்டணியும் ஒத்துப் போகவில்லை. அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியா அல்லது கூட்டணிக்குள் அண்ணா திமுக வா என்பது குறித்து அவர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
அண்ணாமலை கூட்டணி குறித்து சில கருத்துக்களை கூறினால் அதற்கு வானதி சீனிவாசன் இது அண்ணாமலை கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார்
தலைவர்களுக்கு உள்ளேயும் சரி தொண்டர்களையும் சரி குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தந்தை மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு குழப்பமான சூழ்நிலை உள்ளது வருத்தத்துக்குரியது. பின்தங்கிய மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் கடுமையாக உழைத்தவர் உழைத்துக்கொண்டு இருப்பவர். ராமதாஸ் ஒரு போராளி அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருக்கும் போது மிகச் சிறப்பாக பணியாற்றினார் என்பது உண்மை.
தந்தை மகனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு கட்சிக்குள் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது. இருவரும் ஒன்று சேர வேண்டும்.
அப்போதுதான் வன்னியர் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். கூட்டணி யாரோடு இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம் ஆனால் அந்த கட்சி பிளவுபட்டு விடக்கூடாது இருவரும் ஒன்றிணைய வேண்டும்.