விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புனல்வேலி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் காலை நேரங்களில் செல்லக்கூடிய அரசு பேருந்து நிற்காமல் செல்வதால் மீனாட்சிபுரத்திலிருந்து புனல்வேலி தளவாய்புரம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதில்லை ஆகையால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நிற்காமல் செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு தனியார் பேருந்து அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பள்ளி மாணவிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெருமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.