• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்டம்

ByK Kaliraj

Jun 17, 2025

தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 கடந்த 2ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற்றது. நிகழ்விற்கான நிறைவு விழா விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணைமுதல்வர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். இயற்கை பொருட்கள் வேதியல் துறை பேராசிரியர் வசந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இயற்பியல் துறை தலைவர் ரகுராமன் வரவேற்று பேசினார்.

பரிசோதனை புதுமை மற்றும் ஊக்கம் இளம் விஞ்ஞானியின் பயணம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது சிறப்பு ரயில் பற்றியும் வரலாறு ரீதியாக வளர்ச்சிக்கு பங்களித்த விஞ்ஞானிகள் இளமை ஆற்றலை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆரம்பகால விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் சவால்கள் மற்றும் தோல்விகளை எதிர்கொள்ளும் போது விஞ்ஞானிகளின் விடாமுயற்சி பெருமான் புரட்சியாளமான முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகிக்கிறது என்பது பற்றியும் விளக்கி கூறினார். அறிவியலில் சிறிய கேள்விகளின் முக்கியத்துவம் அதை எவ்வாறு ஆர்வத்தை தூண்டும் என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

புதுமை என்பது பரிசோதனைக்கு நிஜ உலக தாக்கத்திற்கு இடையிலான பாலம் ஆகும் மாணவர் தலைமையிலான சோதனைகள் அசல் கருத்துகளால் தூண்டப்படும் போது புதிய கண்டுபிடிப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் விளக்கினார்.
அறிவியலில் விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் மூலம் ஐஐடி மும்பையில் இடம் பெற்ற ஏழ்மையை பின்னணி கொண்ட ஒரு மாணவியின் எழுச்சியூட்டும் கதையை கூறினார்.

முன்னதாக மாணவர்கள் தங்கள் அறிவியல் மாதிரி படைப்புகளை சிறப்பு விருந்தினருக்கு மாணவ மாணவிகள் விளக்கி கூறினார்கள். தொடர்ந்து வினாடி வினா மற்றும் மாதிரி காட்சியில் சிறந்து விளங்கிய மாணவருக்கு சிறப்பு பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. கூடுதலாக பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்விப் பொருட்கள் அடங்கிய புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இளம் விஞ்ஞானி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா நன்றி கூறினார். ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த எண்பது மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.