• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இதய நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 16, 2025

விருதுநகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவர் விருதுநகரில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவருக்கு திடீரென இதய நோய் ஏற்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்காக மதுரை காளவாசல் அருகே தேவகி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக 4 லட்சம் பணம் கட்ட வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 13-ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டார் அதுவரை இரண்டு லட்ச ரூபாய் கட்டப்பட்டதாக இறந்து போன அண்ணா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை கட்டினால் மட்டுமே இறந்தவரை உடலை உறவினர்களிடம் ஒப்படைப்போம் என மருத்துவமனை நிர்வாகம் உடலை தர மறுத்து வருவதாக இறந்தவரின் உறவினர்கள் கூறி மருத்துவமனை முன்பாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அண்ணாதுரையின் உறவினர்கள் அவர் உடல் எங்களுக்கு வேண்டாம் அவருக்கான இறுதிச் சடங்கை மருத்துவமனை வளாகத்திலேயே செய்ய உள்ளதாக கூறி தற்போது அதற்கான ஏற்பாடுகளை செய்து இறுதி சடங்கு செய்ய வந்த உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, மீதமுள்ள பணத்தை கட்ட வேண்டாம் எனக் கூறி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.