சிவகாசி புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பங்கு, பதுவை நகர் “கோடி அற்புதர்” புனித அந்தோணியார் 53-ம் ஆண்டு திருவிழா சிறப்புடன் நடைபெற்றது . “அருட்தந்தை” அ.பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் அவர்கள் தலைமையில் ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி மற்றும் அன்புவிருந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்.. முன்னாள் அமைச்சர் சமத்துவத்தின் அடையாளமான சிவகாசி கே.டி.ராஜேந்தி, பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு “கோடி அற்புதர்” புனித அந்தோனியார் ஆசி பெற்றார். அவரை ஆலய நிர்வாகிகள் வரவேற்று மகிழ்ந்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அதிமுக சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் செய்திருந்தார்.