• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எஸ். சிவசுப்ரமணியனுக்கு நினைவு அஞ்சலி.,

ByE.Sathyamurthy

Jun 14, 2025

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் அண்ணா சிலை அருகில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அவர்களின் தந்தை, பெரியார் விருது பெற்ற பெருந்தொண்டர், (முன்னாள்) மாநிலங்களவை உறுப்பினர், (முன்னாள்) பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர், சட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன், எம்ஏ,பிஎல்., அவர்களுக்கு ஜெயங்கொண்டம் நகர கழகச் செயலாளர், நகர் மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, தலைமையில் 2025 – ஜூன் 14-ல், “6-ஆம், ஆண்டு நினைவு” தின நாளில், அவரது திருவுருவ, படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி “நினைவு அஞ்சலி” செலுத்தி, மரியாதை செய்தார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர்மன்ற உறுப்பினர்கள் இராஜமாணிக்கம், பொய்யாமொழி, ஆனந்த், மற்றும் ஒன்றிய, பேரூர் கழக, உடன்பிறப்புகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.