பேரணியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. மதச்சார்பின்மை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டிய காரணம் எழுந்துள்ளது.
கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி :-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி பயணம்
திருச்சியில் நடைபெற இருக்கும் மதச்சார்பின்மை பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எனது தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது . இதில் பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் குறிப்பாக பெண்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் உயிர்மூச்சு கோட்பாடாக உள்ள மதச்சார்பின்மைக்கும் பெரிய தீங்கு சூழ்ந்துள்ளது.
கடந்த பத்தாண்டு காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் மதச்சார்பின்மை என்கின்ற கருத்தியலை சிதைக்கின்ற நோக்குடன் செயல்படுகிறார்கள்.
அதனை மையப்படுத்திய செயல்படுத்தி வருகிறார்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை மையப்படுத்திய பாஜக அரசு செயல்படுகிறது.
இதனால்தான் மதச்சார்பின்மையை காப்போம் என குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர்ந்த நெருக்கடியை சுட்டிக்காட்டி தேசம் காப்போம் பேரணியை நடத்தினோம்.
இப்போது வக்பு சட்ட திருத்தம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது என கூறப்பட்டாலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தான் பார்க்க வேண்டியது இருக்கிறது அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இதனை அறிந்து ஒன்று சேர வேண்டும் என்று அரைகுறை விடுக்கும் வகையில் இந்த பேரணியை ஒருங்கிணைக்கிறோம்.
மதச்சார்பின்மைக்கு ஆதரவான அரசியல் மதசார்பின்மைக்கு எதிரான அரசியல் என்ற போக்கில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மதச்சார்பின்மையை காப்போம் என உரைத்து முழங்கும் கட்சியாக உள்ளது மாநில அளவிலாக இருந்தாலும் சரி நாடு முழுவதுமாக இருந்தாலும் சரி இந்த கோட்பாட்டில் தான் இப்பொழுது அரசியல் இயங்கி கொண்டிருக்கிறது.
தேசிய அளவில் ஒன்று கூட வேண்டும் என்பதற்கு அறை கூவல் விடுக்கும் விதமாக இந்த பேரணி நடைபெறும்.
அனகாபுத்தூர் பகுதிகளில் வீடுகள் அகற்றப்பட்டது குறித்து கேள்வி கேட்டபோது,
எளிய மக்களின் மீது இதுபோன்ற ஒடுக்குமுறைகள் கூடாது என்பதை அதிகார வர்க்கத்திற்கு எடுத்துக் கூறும் வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாக இருக்கக்கூடிய நாங்கள் அதை சுட்டிக்காட்டி இதனால் வருகிறோம். இதனால் கூட்டணிக்கு எந்த இடையூறும் ஏற்படாது விமர்சனங்களுக்கு இடையில் தான் தோழமை நாங்கள் போற்றி வருகிறோம்.
பேரணியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேட்டபோது,

அது கட்சி சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட்ட முடிவல்ல ஆர்வத்தின் அடிப்படையில் சென்னையைச் சார்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் அந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட பிறகுதான் எனது கவனத்திற்கு வந்தது. இந்த பேரணியில் அப்படி மலர் தூவ வேண்டிய அவசியம் எளவில்லை அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் எழவில்லை.
விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவிகள் மீது தொட்டு பேசுவது குறித்து வேல்முருகன் கூறியதற்கு எங்களுடைய அனுமதியின் பேரில்தான் அவர் எங்களை தொட்டு பேசுகிறார் என மாணவர் தெரிவித்திருந்தார். அது குறித்து கேட்டபோது,
வேல்முருகனின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தான் இந்த காலம் கணிக்கப்பட்டுள்ளது. கி மு ஆறாம் நூற்றாண்டை சார்ந்த நாகரிகம் இது என்கிற முடிவு இன்று அது தொடர்பான ஆய்வாளர்களின் தீர்க்கமான ஆய்வின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே வரலாற்றை திரித்து சொல்வது வழக்கமான ஒன்று அதன் அடிப்படையிலே எதையும் கையாளுகிறார்கள். கேளடி ஆய்வாளருக்கு உடனடியாக ஏற்க வேண்டும். அதனை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.