• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி!!

ByK Kaliraj

Jun 11, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (35) இவர் சிவகாசியில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக மண்குண்டாம்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆலங்குளம் அருகே உள்ள கோடாங்கிபட்டியில் இருந்து தெற்கு ஆணைகூட்டம் கிராமத்திற்கு செல்வதற்காக வந்த கார் தாயில்பட்டி அருகே வரும்போது எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிளும், காரும் ,நேருக்கு நேராக மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்தில் பலியானார்.

தகவல் அறிந்து வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் உடனடியாக பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் மனைவி காயத்ரி ( 30) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் கோடங்கிபட்டி சேர்ந்த மணிகண்டனை ( 46) கைது செய்தனர். இறந்த பாலசுப்ரமணியனுக்கு ஒரு மகள் உள்ளார்.