• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படும்- மோடி எச்சரிக்கை

Byமதி

Dec 7, 2021

ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நடந்தது.

கட்சி எம்.பி.க்கள் தவறாமல் நாடாளுமன்ற  நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. ஒரு பிரச்சினையை  சுட்டிகாட்டினால் குழந்தைகள் கூட அதை மீண்டும் செய்வதில்லை. கட்சி எம்.பி.க்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறினார்.

இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, பியூஸ் கோயல், ஜெய்சங்கர், பிரகலாத் ஜோஷி, ஜிதேந்திரசிங் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை, மேல்சபையில் உள்ள அனைத்து பா.ஜனதா எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர்.