புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலுகின்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்ற தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 36 மாணவ மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி 36 மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் துணை முதல்வர், கல்யாணி தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சுமதி சீதாராமன் பாலகிருஷ்ணன் ரங்கராஜ் கருணாகரன் தனஞ்செயன் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.