• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெறி நாய்கள் தாக்கியதில் 5ஆடுகள் பலி!!

ByAnandakumar

Jun 3, 2025

கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு, பொண் நீலியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 30க்கும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.

வழக்கம்போல் இன்று ஆடுகளை பார்ப்பதற்கு பட்டிக்கு வந்த கதிர்வேல் 6 பெரிய ஆடுகளும், 1 குட்டிகளும் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

கரூரில் தொடர்ச்சியாக 3 நாட்களாக விவசாயிகளின் ஆதாரமாக விளங்கும் ஆடுகளை வெறிநாய்கள் கடித்து வருவதால் விவசாயிகள் சோகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.