அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டி.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திந்த ஜோதிமணி,
2024 டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் மே 28ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இன்று நீதிபதிகள் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தனர். இந்த நிலையில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனை வரவேற்கிறோம். சமூகத்தில் பெண்களை ஒரு உடலாக பார்க்க கூடாது. ஆண்கள் சரிக்கு சமமான ஒரு உயிராக பெண்களை கருத வேண்டும். இந்த வழக்கில் விரைவாக விசாரிக்கப்பட்டு ஐந்து மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் உறுதியான மற்றும் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அதற்காக தலை வணங்குகிறேன். தமிழ்நாடு காவல்துறையும் , மகளிர் நீதிமன்றமும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.






; ?>)
; ?>)
; ?>)
