• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பு..,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 02-06-2025 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவியருக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டு போக்குவரத்து துறை வழங்கிய பாஸ் காட்டியும்,அல்லது அணிந்து செல்லும் பள்ளி சீருடையே பேருந்துகளில் பயணிக்க அடையாளம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் 32 ஆயிரம் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த 40 லட்சம் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு திரும்புகின்றனர்.

அவர்களை வரவேற்கவும் சில பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் புதிய மாணவ மாணவிரை வரவேற்கவும் மலர் கொத்து கொடுத்து மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளபடி காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இறை வணக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று புதிதாக பள்ளிக்கு செல்லும் மழலையர் கூட்டம். பள்ளியின் புதிய சூழல், அறிமுகம் இல்லாத ஆசிரியர் இவர்கள் மத்தியில் மழலையரை
அமைதிப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் மழலையர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் அனுபவங்கள் புதுமையானது.