விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்று திறந்து வைத்தார்.
மேலும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தவெக தலைவர் விஜயை இளம் காமராஜர் என கல்வி விருது வழங்கும் விழாவில் கூறிய கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பெருந் தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான் எனவும் அவரைப் போல் யாரும் வர முடியாது எனவும் இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராசர் என யாரையும் கூற முடியாது என்றார்.

மேலும் காமராஜர் செய்த சாதனை களை நிகழ்த்திய நபர் என யாருமே இருக்க முடியாது எனவே மிகைப் படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது என்றார்.
மேலும் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நடிகர் கமலஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தை வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னடம் தமிழர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்த மகிழ்கிறார் என விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர் கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு என்றார்.
மேலும் திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள எல்லா மொழிகளுக்கு உண்டான சிறப்புகளை நாம் போற்ற வேண்டும் என்றார்.
மேலும் எந்த மொழி மூத்த மொழி என்பதை பேச வேண்டியதில்லை எனவும் இந்த வெறுப்பு அரசியலை பாஜகவும் ஆர்எஸ்எஸ் செய்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எந்த மொழி சிறந்தது என்பதை நிர்ணயிக்க வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தான் என்றார்.
மேலும் கீழடியில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என விமர்சனம் செய்தார்.
மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கிருந்து தமிழுக்கு குரல் கொடுப்பதை விட கர்நாடகாவில் சென்று குரல் கொடுக்க வேண்டும் எனவும் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் கமலஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அதே சமயம் கர்நாடகாவில் கமலஹாசனின் உருவப் படத்தை எரிப்பதை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றார்
மேலும் கன்னட மொழி விவகாரம் குறித்து கமலஹாசன் ஒரு நடிகராக பேசியிருப்பதை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை எனவும் மொழி குறித்து வரலாற்று அறிஞர்கள் பேச வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் பேசுவது தேவையற்றது என்றார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் பாமக ஒரு ஜாதி கட்சி எனவும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக செய்கிறார்கள் என விமர்சனம் செய்தார்
மேலும் பேசிய மாணிக்கம் தகவல் எம்பி எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் சமயத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள் எனவும் பாஜக மட்டுமே தேர்தலில் தோல்வி அடையும் மாநிலங்களில் முதலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வருவதற்கு பதிலாக சிபிஐ அமலாக்கத்துறையும் தான் என்றார்.
மேலும் பாஜக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையையும் தன்னுடைய கிளை அமைப்பாக செயல்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.