ராஜபாளையம் உட்கோட்ட காவல் சரக துணை காவல் கண்காணிப்பளராக,
பி,பஸிணாபீவி, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது,2020 பேஜ் நேரடி டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டு கோவையில் பணியாற்றி தற்போது ராஜபாளையத்தில் பொறுப்பேற்றுள்ளேன்.

முதலில் இங்கு எந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டு உயரதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று தீவிரமாக களப்பணியில் இறங்குவேன் முக்கியமாக, சமூகவிரோத செயல்கள்,அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள்,லாட்டரி விற்பனை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்,நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுதல்,பள்ளி,கல்லூரி,தொழில்கூடங்கள்,பொது இடங்களிலும் போதை பொருட்கள் ,ஒழிப்பு,பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு,சாலை பாதுகாப்பு,சைபர் கிரைம் குற்றங்கள்,போன்றவற்றின், விழிப்புணர்வு,கூட்டங்கள்,
நடத்தவும் உத்தேசித்துள்ளேன்,
பொதுமக்கள்,தங்களுக்கான பிரச்சனைகளை,எங்கள் கவனத்திற்கு கொண்டு வரும்பச்சத்தில்,விசாரணை செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,மேலும் புகார்,மற்றும் விசாரணைக்கு வருபவர்கள்,நேரடியாக காவல் நிலையத்துக்கு வரலாம் சிபாரிசுக்கு யாரையும் அழைத்துவர தேவையில்லை என்றார்.