கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு (பள்ளர் மாவிளக்கு) ஆட்டம் பாட்டத்துடன் தேவேந்திர குல வேளாளர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்.
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று 28.05.2025 மாலை அமராவதி ஆட்சிக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பள்ளர் மாவிளக்கு என்று அழைக்கப்படும் தேவேந்திர குல சமுதாயத்தைச் சார்ந்த ஆன்மீக பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் வண்ண சீருடை அணிந்து தலையில் தேங்காய், மாவிளக்கு சுமந்தபடி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர்.
தொடர்ந்து இரவு புறப்பட்ட மாவிளக்கு திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து அதிகாலை ஆலயம் வந்து அடைந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் வழங்கிய பிறகு நடை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் ஆலயம் வருகை தந்து மாரியம்மன் கம்பத்தை அமராவதி ஆற்றிற்கு வழி அனுப்பி வைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காவல்துறையின் சார்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மாரியம்மன் வைகாசி திருவிழா ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான ஆலய நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.