எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஆகாய தாமரை செடிகள் நிறைந்த தண்ணீர் மிதக்கும் பாலத்தில், மாநகராட்சி சார்பில் பணிகள் முடிக்கப்படாத பகுதிக்கு அத்துமீறி உள்ளே நுழைந்து கூட்டம் கூட்டமாக குழந்தைகளுடன் குவியும் மக்கள்.
பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மாநகராட்சி மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத பார்க்கில் செல்ஃபி மோகத்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம். – அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்குமா.! மாவட்ட நிர்வாகம்.?

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான மதுரை கே.கே.நகர் கிழக்கு 80 அடி சாலையில் அமைந்துள்ளது சுந்தரம் பூங்கா. மதுரை மாநகராட்சியின் 33-வது வார்டு பகுதியில் உள்ள இந்த இடத்தை கடந்த 2021 ஆண்டடு திமுக ஆட்சிக்கு பிறகு மதுரையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த பூங்காவை முழுமையாக சுற்றுலா தளமாக மாற்ற சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து சென்னை, கோவை போன்று மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு 40 கோடி செலவில் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்., இந்த புனரமைப்பு செய்யப்பட்டு வரும் பூங்காவில் செயற்கை நீருற்று, உணவாக கடைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நூலகத்துடன் நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது. மேலும், சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் உள்ள பெரிய பெரிய மால்கள், பொழுதுபோக்கு தளங்கள் இல்லாத நிலையில் கோவில் மட்டுமே அமைந்துள்ள மதுரையிலும் சுற்றுலாத்தளம் அமைப்பதற்காக இந்த பூங்காவை சுற்றி உள்ள கண்மாய்களுடன் இணைத்து படகு சவாரி ஆகியவை கொண்டுவர மிதக்கும் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்., பணிகள் ஏதும் முழுமையாக நிறைவடையாத நிலையில்., பக்கவாட்டு சுவர்கள், கைப்பிடி இல்லாமல் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் உள்ள மிதக்கும் பாலம் குறித்து கடந்த சில நாட்களாக தங்களது சுய விளம்பரத்திற்காக எந்தவித அதிகாரிகளின் ஆலோசனையும் பெறாமல் மதுரையில் சுற்றுலா தளம் என youtubers சிலர் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் விளைவாக தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளி குழந்தைகளை, பெற்றோர்களும், இளைஞர்கள், இளம் பெண்கள் தற்போது குடும்பம் குடும்பமாக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வண்டியூர் கண்மாயின் அமைக்கப்பட்டு வரும் மிதக்கும் பாலத்தில் நின்றபடி செல்பி எடுப்பதும்., அதன் பக்கவாட்டு பகுதிக்குச் சென்று அமர்வதும்., செல்பி மோகத்தால் குழந்தைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் குழந்தைகள் தவறி கண்மாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. தொடர்ந்து., மிதக்கும் பாலத்தை சுற்றியுள்ள ஆகாயத்தாமரை செடிகளுக்குள் யாரேனும் விழுந்தால் மூழ்கி உயிரிழக்கும் அபாயமும் இருந்து வருகிறது.
பக்கவாட்டு கைப்பிடியோ.? அல்லது பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்களும்., காவல்துறையினரோ.? மாநகராட்சி அதிகாரிகளும் இல்லாத நிலையில் கூட்டம் கூட்டமாக தடுப்புகளை மீறி மிதக்கும் பாலத்தில் நுழைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பொழுதுபோக்கு தளமாக தற்போது மாற்றி உள்ளது..! எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ள இந்த மிதக்கும் பாலத்தில் யாரேனும் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்., பாதுகாப்பு தடைகளை மீறி உள்ளே செல்பவர்கள் நிலை மற்றும் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூகஆர்வலர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.?
அதிகாரிகளுடன் ஆலோசனை பெறாமலும்., முறையான செய்தி குறித்த தகவல் இல்லாத சில யூடியூபர்ஸ் தங்களது சுய விளம்பரத்திற்காக வெளியிடும் வீடியோக்கள் மூலம் படையெடுக்க தொடங்கிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களோ அல்லது காவல் துறையோ அங்கு பணியமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.