சிவபெருமானின் திருவிளையாடல்களில் 64 ல் திருக்கோவில் காரணமாக இருந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உப கோவிலான மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது.

பாலாலயத்தை முன்னிட்டு சிவாச்சாரியார் செந்தில் பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல் ராஜன்,அறங்காவலர் குழு மீனாஅன்புநிதி,உபயதாரர் ராமசாமி குடும்பத்தினர்,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் உதவி ஆணையர் லோகநாதன் செயல் அலுவலர்/துணை ஆணையர் கிருஷ்ணன் கண்காணிப்பாளர் சரவணன் பேஷ்கார் பகவதி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.