விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனையூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் 176 உள்ளன. இங்கு தற்போது 82 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குடியிருப்புகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை செப்டிக் டேங்க் உடைந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

கழிவுநீர் செல்ல வாருகால் முறையாக அமைக்கப்படவில்லை, குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது .மேலும் குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட காலி குடியிருப்புகள் பயன்படுத்தப்படாததால் சேதமடைந்து வருகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் குடியிருப்பில் குடியிருக்க வேண்டும் என அறிவுறுத்தவும் அவர்கள் வீடு வேண்டாம் என்றால் தேவைப்படும் பயனாளிகளுக்கு காலி குடியிருப்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.