புதுச்சேரி அடுத்த வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகர் தியாகு பிள்ளை நகர் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போஸ்தலர் பால் கார்ல் விக்டர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விசுவாச வார்த்தை சபையின் ஆலயத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஓசன்னா மிஷன் சபையின் அப்போஸ்தலர் வேதநாயகம் மற்றும் சங்கை தனசீலன், முன்னாள் துறை சபாநாயகர் பாலன், என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் நாராயணசாமி,ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது மேலும் அகில இந்திய கிறிஸ்துவ முன்னேற்றக் கழக தேசிய மற்றும் மாநில தலைவர்கள் அக்மா தலைவர்கள் மற்றும் ஏ ஐ சி டி ஓ தேசிய செயலாளர் செபஸ்தியான் மற்றும் ரெட்டியார் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த கிறிஸ்தவர்கள் விசுவாசிகள் ஊழியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் நாராயணசாமி ஏற்பாட்டின் பேரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.