புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், புதிய தொழிலாளர்கள் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடுதழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, என்.டி.யு.சி, எல். பி. எப், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டம் குறித்து ஏஐடியுசி பொதுச் செயலாளர் சேது செல்வம் கூறும்போது…
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு தொகுப்பாக மாற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.