• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டத்தில், கனிமொழி தொகுதி வாரியாக கட்சியின் பொறுப்பாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.


கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் 23 சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மேயரும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது.

சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச்செயலாளர் மண்டல தேர்தல் பெறுப்பாளர் கனிமொழி MP கலந்து கொண்டு, வருகிற 2026 தேர்தலுக்கான ஆலோசனைகள் வழங்கினார். உடன் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தமிழக வணிக கழக, தலைவர் சுரேஷ்ராஜன், குமரி மாவட்ட திருக்கோவில்களில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மற்றும் கழக மாநில மாவட்ட ஒன்றிய மாநகர பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு முன்பாக கூடியிருந்த கட்சியினரிடம் அண்ணன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 4_ஆண்டு ஆட்சியின் சாதனையை மக்களை சந்தித்து சொல்லுங்கள். குறிப்பாக இந்த ஆட்சியில் பெண்கள் பெற்றுள்ள ஏராளமான நன்மைகள்,
தமிழகம் மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டங்களை பார்த்து பிற மாநிலங்களில், தமிழகம் மேற்கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்கள் என தெரிவித்த கனிமொழி, இது வரை மேடை கிடைக்காது அரசியலில் முகவரியை இழந்த கூட்டம் பாஜகவின் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களை சந்திக்க வருகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. கடந்த கால தேர்தல் போல் அல்ல, வரும் தேர்தல் திமுகவை பொருத்த மட்டில் மிக, மிக முக்கியமான தேர்தல் 7_ வது முறையும் திமுகவின் ஆட்சி வரவேண்டும் என தெரிவித்தார்.