நீலகிரி மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக உதகமண்டலத்தில் 27.4 மில்லி மீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும் அவலாஞ்சி பகுதியில் 15 மில்லி மீட்டர் மழையும் கோடநாடு பகுதியில் அதிகபட்சமாக 25 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கீழ்க்கோத்தகிரி பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும் கோத்தகிரி பகுதியில் 11 மில்லி மீட்டர் மழையும் அவலாஞ்சி பகுதியில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் உதகை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எமரால்ட் பகுதியில் இரண்டு மில்லி மீட்டர் மழையும் கேத்தி பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும் உலிக்கள் பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும்பதிவாகியுள்ளது.
மேலும் உதகை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.