• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர்..,

BySeenu

May 16, 2025

கோவை, சரவணம்பட்டி கீர நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அங்கு உள்ளன. வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீரநத்தம் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் முகத்தை கர்ச்சீப் மறைத்துக் கொண்டு ஒவ்வொரு அறைக்கும் சென்று கதவை திறந்து பார்த்து நோட்டமிட்டு, பின்னர் அந்த அறைகளில் இருந்து 13 மொபைல் மற்றும் ஒரு லேப்டாப் திருடி சென்று உள்ளார். அதன் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி தனியாக தங்கி இருக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதே போல இன்று காலை மட்டும் மூன்று தங்கும் விடுதியில் திருட்டுப் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விடுதியில் காவலர்கள் எதுவும் இல்லாததாலும், அதே போல காவல் துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணி செய்யாமல் இருந்ததால், இது போன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதியில் தனியாக அறைகள் மற்றும் வாடகை வீடுகள் தங்கி இருக்கும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.