அழகு மற்றும் ஒப்பனை வீடியோக்கள் மூலம் டிக்டாக்கில் பிரபலமான மெக்சிகோவைச் சேர்ந்த வலேரியா மார்கேஸ் (23), நேரலை ஸ்ட்ரீமிங்கின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் சுமார் இரண்டு லட்சம் பாலோவர்ஸ் கொண்ட வலேரியா, ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரலை ஸ்ட்ரீமிங் நடத்திக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், வலெரியாவுக்கு ஒரு பரிசுப் பொருளை வழங்குவது போல் நடித்து அங்கு வந்து பின் துப்பாக்கியால் சுட்டார்.
தலை மற்றும் மார்பில் குண்டு காயமடைந்த வலேரியா நாற்காலியில் இருந்து விழுந்தவுடன், ஒருவர் தொலைபேசி நேரலை ஸ்ட்ரீமிங்கை நிறுத்தினார். மெக்சிகோ பெண்கள் மீதான வன்முறைகள் அதிக அளவில் உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.








