• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சிறார் ஓட்டிய கார் கவிழ்ந்து அருகில் அமர்ந்திருந்த சிறார் பலி

ByR.Arunprasanth

May 13, 2025

கூடுவாஞ்சேரி சரக காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறார்கள் 4 பேர் நேற்று மாலை செங்கல்பட்டு இருந்து பெருங்களத்தூர் நோக்கி டாடா இண்டிகா காரில் ஜி.எஸ்.டி.,சாலையில் சென்றனர். மறைமலைநகர் அடுத்த டென்சி பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன்17 என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் மற்ற சிறார்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கேசவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.