புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் பேரூராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளம் தலைமுறை விளையாட்டு அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் திடீரென்று முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமனிந்து வந்த இருவரை பார்த்து அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கண்ணீர் மல்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தை இலுப்பூர் நகர கழக செயலாளர் சத்யா மணிகண்டன் மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் குருபாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
