• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்

BySeenu

May 12, 2025

நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நிலம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புக்கு பயன் அளிக்கும் வகையில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் கோவையில் துவங்கப்பட்டது..

நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஜவுளித்துறை ஆலோசகர் கருப்புசாமி,23 வது மாமன்ற உறுப்பினர் சித்ரா கே மணியன் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய பொதுச்செயலாளர் செந்தில்குமார்,மாநில துணைத்தலைவர் முரளிதரன், கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாசம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேசன் தலைவர் ஆனந்த கிரிட்டினன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற வரலாற்று நில ஆவணங்கள் கண்காட்சியில்,நிலங்களை வரன் முறை செய்தததில் தமிழர்களின் பங்கு குறித்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டன..

இது குறித்து நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முத்துராஜா கூறுகையில், இந்த கண்காட்சி, வரலாற்று ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,நில மேலாண்மை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வாயிலாக,கிராமபுற விவசாயிகளுக்கு நிலப் பயன்பாடு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய நில மேலாண்மை துறைகள் தொடர்பான பணிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது.குறித்த பயிற்சிகளை இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆலோசனை குழு இயக்குனர்கள் நில அளவைத் துறை கூடுதல் இயக்குனர்கள் சி.பி ராதாகிருஷ்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முதல்வர் கண்ணுசாமி நில அளவைத் துறை உதவி இயக்குனர்கள் மணி சேகரன், தவமணி, கணேசன், மற்றும் எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு, காமிலா பானு, காமாட்சி, மஞ்சுளா, பங்கஜம், ரங்கநாயகம், மற்றும் கார்த்திகேயன், மோகன்ராஜ், குமாரவேலு செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் வெற்றிவேல் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.