*இரண்டாவது குருஸ்தலமான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு நவகிரக பரிகார சாந்தி ஹோமம் பூஜை நடைபெற்றது.
நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் (மதியம்)சரியாக 1:19 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது குருஸ்தலமாக வழங்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது. அதில் காலையில் நவகிரக சாந்தி பரிகார ஹோமம் பூஜை தொடங்கி பூர்ணாகுதி தீபாராதணை நடைபெற்று நவகிரக குரு தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதன் பின்னர் மதியம் குரு தட்சிணாமூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்று முடிந்த பின்பு 1.19 மணி அளவில் குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பிரசவிக்கும் தருணத்தில் மகா தீபாவனை நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு வில்வ திரிசதி அர்ச்சனை செய்து பட்டு உடுத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் இரவு சொர்ண அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் பங்கு பெறும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.