விருதுநகர் மாவட்டம் லாரி மீது மோதியதில் பள்ளி மாணவன் பலி மற்றொரு மாணவன் படுகாயம். சிவகாசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் நடுத்தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மகன் பிரனேஷ் (வயது 17 ) இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

இவரும் நண்பர் படந்தால் ஊராட்சி தென்றல் நகரை சேர்ந்த நித்திஷ் குபேரன் (வயது 17) தாயில்பட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நித்திஷ் குபேரன் ஓட்டினார்.அப்போது முன்னால் சாத்தூருக்கு சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிள் காரின் பின்புறமாக மோதியது. இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பிரனேஷ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் . அக்கம் பக்கத்தினர்அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் கொண்டு வரும் வழியில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த ரித்திஷ்குபேரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பிரனேஷனின் தகப்பனார் பாண்டுரங்கன் வெம்பக்கோட்டை போலீஸில் புகார் செய்ததன் பேரில் போலீசார் லாரி டிரைவர் விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (40) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.