சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பெயர்ச்சி விழாவுக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் தமிழக முழுவதிலிருந்தும் குரு பெயர்ச்சி விழாவில் பங்கு பெறுவர். இந்த நிலையில் சோழவந்தான் இல் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலை துறையினர் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, சோழவந்தானிலிருந்து முள்ளி பள்ளம் வரை ஆங்காங்கே உள்ள சிறிய பள்ளங்களை சரி செய்து விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.
