நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலைப் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள தொரப்பள்ளி பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றைக்காட்டு யானை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து உலா வருவது வழக்கம்.

அதேபோல் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தொரப்பள்ளியில் அமைந்துள்ள கூடலூர் மைசூர் செல்லும் தேசிய சாலையில் உலா வந்துள்ளது. அப்போது இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தொரப்பள்ளி பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையை ரோந்து வாகன மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.
அப்போது பொதுமக்கள் மற்றும் சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் யானை வனப் பகுதிக்கு விரட்டப்பட்டு அதனை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.