• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..,

லீக் போட்டிகளில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸையும் வெளியேற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை சென்னை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி 11 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இனி அற்புதங்கள் நிகழ வேண்டும்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். ஆண்ட்ரே ரசல் (21 பந்துகளில் 38), மனிஷ் பாண்டே (28 பந்துகளில் 36) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினர். சொந்த மண்ணில் ஆடிய கொல்கத்தாவுக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஸ்கோர் 11 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழந்தார். ஆனால் சுனில் நரைனும், கேப்டன் அஜிங்க்யா ரஹானேவும் இணைந்து பவர் பிளே ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தனர்.

17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த சுனில் நரைனை நூர் அகமது பந்துவீச்சில் எம்.எஸ். தோனி ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். மிடில் ஆர்டரில் அங்கிஷ் ரகுவன்ஷி (1), ரிங்கு சிங் (9) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ரஹானே 13வது ஓவரில் டெவோன் கான்வேவால் கேட்ச் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். பின்னர் மனிஷ் பாண்டேவும், ஆண்ட்ரே ரசலும் அதிரடியாக ஆட கொல்கத்தா அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.

பதிலுக்கு ஆடிய சென்னை அணி 5.2 ஓவர்களில் 60 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. சென்னை ஜெர்சியில் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் பட்டேலின் அதிரடி ஆட்டம் பவர் பிளே ஓவர்களில் சென்னை அணிக்கு பலம் சேர்த்தது. வெறும் 11 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸும், ஷிவம் துபேவும் இணைந்த பிறகு சென்னை அணி எளிதாக 100 ரன்களை கடந்தது. அரைசதம் அடித்தவுடன் ப்ரீவிஸ் ஆட்டமிழந்தார். கடைசி 24 பந்துகளில் சென்னை அணிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கேப்டன் தோனியின் நிதானமான ஆட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஒருபுறம் தோனி தடுப்பாட்டம் ஆட, ஷிவம் துபேவும் நெருக்கடிக்கு உள்ளானார். 19வது ஓவரில் வைபவ் அரோரா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ஷிவம் துபேவை ரிங்கு சிங் கேட்ச் செய்து வெளியேற்றினார். கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆண்ட்ரே ரசல் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த தோனி கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார். ரசலின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அன்ஷுல் காம்போஜ் சென்னை அணியின் வெற்றி ரன்களை எடுத்தார்.

சென்னை அணி வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஷிவம் துபே (40 பந்துகளில் 45), உர்வில் பட்டேல் (11 பந்துகளில் 31) ஆகியோரும் சென்னை அணியின் முக்கிய ஸ்கோரர்கள் ஆவர். கேப்டன் எம்.எஸ். தோனி 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியின் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.