நாயைக் கவ்விக்கொண்ட சென்ற சிறுத்தையின் பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப் பகுதியை கொண்ட மாவட்டம். இங்கு மான், கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் உதகையில் உள்ள கிளன்ராக் காலனி பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தது. அப்போது வீட்டின் அருகே இருந்த வளர்ப்பு நாயை கவ்விக் கொண்டு செல்லும் CCT காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி தெரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.