மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா இராஜகோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரியம்மன் ஆலயத்தில் தீக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.விழா கடந்த 23-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மன் வீதி உலா காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.

அந்த வகையில் இன்று விழாவின் சிகர நிகழ்வான பக்தர்கள் தீக்குழி இறங்கும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மேல சாலை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.