விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் இருக்கன்குடி கிளைக் கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் MP ராஜகுரு தலைமையில் விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ரமேஷ் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இருக்கன்குடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

அன்னதானத்தின் போது இனிப்பு மற்றும் சிக்கன் பிரியாணி ஆகியவற்றை கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் MP. ராஜகுரு மற்றும் MP. கருப்பு இருக்கன்குடி கிளைக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.