• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள்

ByG. Anbalagan

May 5, 2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பந்தலூர் சேரம்பாடி பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது .

இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர் குறிப்பாக வனப் பகுதியிலிருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வரும் சம்பவங்கள்  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் சேரம்பாடி  தொகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு   செல்லக்கூடிய சாலையில்  சிறுத்தை சுற்றி திரிந்த  சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்  மிகுந்த அச்சமடைந்துள்ள நிலையில் வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

இதனிடையே சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .