மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோதண்ட ராமர் சீதை திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஆண்டுதோறும் கண்ணன் ராதை திருமண வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதேபோன்று இவ்வாண்டும் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கண்ணன் ராதை திருமண விழாவானது கடையநல்லூர் பிரம்மஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர் குழுவினர்கள் பஜனைகள் பாடி ராதை திருக்கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.

இதில் அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்து இத்திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த திருமண வைபோகத்தை ஸ்ரீ ராம பக்த சபை ஏற்பாடு செய்திருந்தது. முடிந்தவுடன் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)