நீட் தேர்வு மதுரையிலுள்ள 15 தேர்வு மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்திலுள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தமிழ்மொழியில் 1615க்கு மேற்பட்ட தேர்வர்களும், 6600க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஆங்கில மொழியில் , சில தேர்வர்கள் இந்தி மொழியிலும் தேர்வு எழுதினர்.
இதில் 3 தேர்வு மையங்களில் தமிழ்மொழி நீட் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களும், 11 தேர்வு மையங்களில் ஆங்கிலமொழியில் நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு, ஒரே ஒரு தேர்வு மையமான மதுரை கப்பலூர் அரசு கல்லூரி தேர்வு மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் எழுதுவதற்கான தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

600-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ள தேர்வு மையங்களில் தலா 10 காவல் துறையினரும் , 600க்கும் கீழ் தேர்வர்கள் உள்ள தேர்வு மையங்களில் தலா 6 காவல்துறையினர் என மூன்று தேர்வு மையங்களில் 12 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்வின் போது முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கான கடுமையான கட்டுப்பாடுகளுடன் காலை 11:30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களும் மதுரை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் காலை முதலே அந்தந்த தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் பெற்றோர்களுடன் வருகை தர தொடங்கினர்.
ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்தும், ஆடைகள் கட்டுப்பாடுகள் குறித்தும் தேர்வு மைய பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தினர்.













; ?>)
; ?>)
; ?>)