எதிர்வரும் மக்கள் தொகை கணெக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் இந்தியா முழுவதும் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 93 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்.

இந்த அறிவிப்பை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் பாராட்டி வரவேற்கிறேன். சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, முக்குலத்துப்புலிகள் கட்சியின் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தினால் அந்தந்த சமூகத்தின் உண்மையான மொத்த எண்ணிக்கை தெரிய வரும்.
அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சதவீத அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டால் அனைத்து தரப்பட்ட சமூக மக்களும் முன்னேற்றம் அடையலாம். இது தான் உண்மையான சமூகநீதி ஆகும். மக்களவை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த உள்ள மத்திய அரசை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் பாராட்டுகின்றேன்.